அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவஸ்தையா?

ஒற்றைத் தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.

10 முதல் 40 வயதில் உள்ளவர்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது

மனச்சோர்வு, உடல் சோர்வு, மனஅழுத்தம், எரிச்சல் உணர்வு, பருவநிலை மாற்றம், உணவு, உணவு அருந்தாமல் தவறவிடுவது மற்றும் இதர நிலைகள் ஒற்றைத் தலைவலியை ஊக்குவிக்கும் நிலைகளாகும்.

இதனை யோகசானம் மூலம் கூட எளிதில் சரி செய்ய முடியும். அதில் பிரம்மரி பிராணயாமம் என்ற பயிற்சி பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

  • ஒரு அமைதியான சூழலில் சுகாசன நிலையில் அமருங்கள். இரு கண்களை மூடி, ஆழமாக மூச்சை இழுத்து, அந்த அமைதியான சூழலை அனுபவியுங்கள்.
  • கன்னம் மற்றும் காதை இணைக்கும் குருத்தெலும்பு பகுதியில் உங்கள் ஆட்காட்டி விரலை வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஆழமாக மூச்சை இழுத்து காது குருத்தெலும்பு பகுதியை அழுத்தி மூச்சை வெளியில் விடுங்கள். மூச்சை வெளியில் விடும்போது உங்கள் வாயை மூடியபடி “ம்” என்ற ஒலியை எழுப்புங்கள்.
  • உங்கள் காதுகளின் குருத்தெலும்பு பகுதியை மிகவும் கடினமாக அழுத்த வேண்டாம். “ம்” என்ற ஒலியை முடிந்த அளவு சத்தமாக எழுப்பவும். இதே முறையை தொடர்ந்து 3 அல்லது 4 முறை செய்யவும்.
நன்மைகள்
  • ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு சிறந்த நன்மையைத் தரும் இந்த பயிற்சி.
  • பிரம்மரி பிராணயாமம் பதட்டம், கோபம், ஆச்சர்யம், விரக்தி மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்குகிறது.
  • ஹைப்பர் டென்சன் அல்லது உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் இந்த பயிற்சியால் நன்மை அடையலாம். அவர்களின் இரத்த அழுத்த நிலை வழக்கமான அளவை அடைய உதவும்.
  • உங்களுக்கு காய்ச்சல் அல்லது தலைவலி இருந்தால் இந்த பயிற்சியை செய்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
  • இந்தப் பயிற்சி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் மனது அமைதியாகும்.
கவனிக்க வேண்டியது

இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது, உங்கள் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும். உங்கள் முகத்தில் எந்த ஒரு அழுத்தத்தையும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

3-4 முறைகளுக்கு மேல் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம்.

மூச்சுப்பயிற்சி செய்வதற்கு முன்னர் யோகா நிபுணரிடம் ஆலோசனை கேட்டு இதனைத் தொடங்கலாம்.